தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மனநலம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க பணிகள் சமூகத்தில் முன்மாதிரியான பங்களிப்பை அளிக்க உதவியது என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
புதுமையான ஆராய்ச்சிகள், அர்ப்பணிப்புடன் கூடிய நோயாளிகளுக்கான சேவை, மேம்பட்ட கல்வி திட்டங்கள் ஆகியவை மனநலம் , நரம்பியல் அறிவியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டெலி-மனஸ் தளம், நாடு முழுவதும் அதன் 53 மையங்களுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 லட்சம் மக்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மொழிகளில் சேவை வழங்கியுள்ளது.
நவீன உடல்நல பராமரிப்பு அமைப்புகளை யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகளுடன் ஒருங்கிணைத்து மனம், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது.
மனநலம், நரம்பியல் அறிவியலில் அதிநவீன சிகிச்சைக்கான மனநல சிறப்புப் பிரிவு, மத்திய ஆய்வக வளாகம், பீமா விடுதி, அடுத்த தலைமுறை 3டி எம் ஆர் ஐ ஸ்கேனர், மேம்பட்ட டிஎஸ்ஏ அமைப்பு உள்ளிட்ட புதிய வசதிகளை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 1970-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் குறைவாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு வரும் ஏராளமான நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகள் இங்குள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தனது பத்தாண்டு கால பயணத்தில், தேசிய மனநலம், நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ கவனிப்பு, ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றில் உலகளவில் முன்னணியில் உள்ளது, மனநலக் கொள்கைகளுக்கு ஊக்கமளிக்கும் நடைமுறைகளையும் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையா தெரிவித்துள்ளார்.