Wednesday, January 08 2025 | 09:23:29 AM
Breaking News

தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

Connect us on:

தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான  அடிக்கல்லை  நாட்டுகிறார் பிரதமர்

12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் ரயிலில் பிரதமர் பயணம் மேற்கொள்வார்.

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான தில்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் 13 கிமீ தூரத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவின் மூலம் தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறும். இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும்.  மேலும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும்.

1,200 கோடி மதிப்பிலான தில்லி மெட்ரோ 4ஆம் கட்டத்தின் ஜனக்புரி மற்றும் கிருஷ்ணா பார்க் இடையேயான 2.8 கிமீ தூரத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். தில்லி மெட்ரோ கட்டம் – IV இன் முதல் பகுதி இதுவாகும். மேற்கு தில்லியின் கிருஷ்ணா பார்க், விகாஸ்புரியின் சில பகுதிகள், ஜனக்புரி உள்ளிட்ட பகுதிகள் பயனடையும்.

சுமார் ரூ.6,230 கோடி மதிப்பிலான தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டத்தின் 26.5 கிமீ ரிதாலா – குண்ட்லி பகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வழித்தடம்  தில்லியில் உள்ள ரிதாலாவை ஹரியானாவில் உள்ள நாதுபூருடன் (குண்ட்லி) இணைக்கும், இது தில்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். ரோகினி, பவானா, நரேலா, குண்ட்லி ஆகியவை பயன்பெறும். முக்கிய பகுதிகள், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்தும். செயல்பாட்டிற்கு வந்ததும், நீட்டிக்கப்பட்ட ரெட் லைன் வழியாக தில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பயணிக்க இது உதவும்.

புதுதில்லியின் ரோகினியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான) புதிய அதிநவீன கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வளாகம் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு,  ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு  ஆகியவை இருக்கும். இது நோயாளிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தடையற்ற சுகாதார அனுபவத்தை உறுதி செய்யும்.

About Matribhumi Samachar

Check Also

குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில்  சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள்,  அரசுத் திட்டத்தின்  பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை …