மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்திற்கான நில அளவை நிறுவனங்களை பணியமர்த்த பட்டியலிடுவதற்கான முன்மொழிவு தொடர்பாக மத்திய பொது கொள்முதல் போர்ட்டலில் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக பொருளாதார குறியீடுகளில் மாதிரி கணக்கெடுப்புகளை மேற்கொள்வதற்காக ஆய்வு நிறுவனங்களை பணியமர்த்த பட்டியலிடும் பணியை தேசிய புள்ளிஇயல் அலுவலகம் தொடங்கியுள்ளது. அதன் விவரங்கள் முன்மொழிவு கோரிக்கை(ஆர்.எஃப்.பி.) ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் கணக்கெடுப்பு பிரிவு இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் விரிவான மாதிரி கணக்கெடுப்புகளை மேற்கொள்கிறது. இந்த ஆய்வுகள் முதன்மையாக சமூக-பொருளாதார தலைப்புகளில் நாடு தழுவிய அளவில் வீட்டு கணக்கெடுப்பு மற்றும் நிறுவன கணக்கெடுப்பு மூலம் தரவுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. அதன் வரம்பை மேம்படுத்தவும், அதன் ஆய்வுகளின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், தேசிய புள்ளியியல் அலுவலகம் 2024 டிசம்பர் 12 அன்று முன்மொழிவுக்கான கோரிக்கையை வெளியிட்டது. இது தனியார் கணக்கெடுப்பு நிறுவனங்களை தங்களுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்தது. தனியார் நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் பல துறைகளில் பரந்த அளவிலான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான திறனை தேசிய புள்ளியியல் அலுவலகம் வலுப்படுத்திக் கொள்ள முடியும். முன்மொழிவுக்கான கோரிக்கை ஆவணம், சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு, https://mospi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது eprocure.gov.in/epublish/app-ல் உள்ள மத்திய பொது கொள்முதல் போர்ட்டலைப் பார்வையிடலாம்.
ஏலங்கள் / முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2025, ஜனவரி 13 மாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இனி எந்த நீட்டிப்பும் செய்யப்படாது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.