Thursday, January 09 2025 | 02:45:34 AM
Breaking News

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது

Connect us on:

மின்மாற்றிகளின் சோதனை பற்றிய  கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தேசிய சோதனை அமைப்பின் இயக்குநர் திரு எம் சுரேஷ் பாபு மற்றும் இந்த அமைப்பின் தென் மண்டல குழுவினர் கலந்து கொண்டனர்.

     

நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வில் விஞ்ஞானி கே. ஜெயராஜ், டிரான்ஸ்ஃபார்மர்களின் சோதனை பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார். ஐஎஸ் 1180 (பகுதி 1)-ன் படி டிரான்ஸ்ஃபார்மர்களில் நிறுவப்பட்டுள்ள புதிய வசதிகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். பல்வேறு டிரான்ஸ்ஃபார்மர் தொழில் துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தரநிலை பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வு, பங்குதாரர்களிடையே தரம் சார்ந்த மனநிலையை வளர்ப்பதில் தொழில்கள் மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனம் இடையேயான ஒத்துழைப்பின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முன்னதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை தலைமை இயக்குநர் விஞ்ஞானி டாக்டர் மீனாட்சி கணேசன் தொடக்க உரையாற்றினார். சென்னை கிளையின் விஞ்ஞானி திரு ஸ்ரீஜித் மோகன் அமர்வுகளின் பொதுவான கண்ணோட்டம் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில் விஞ்ஞானி திரு பி.என்.முரளி வரவேற்று பேசினார்.

     

About Matribhumi Samachar

Check Also

ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே பார்வையிட்டார்

ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன்  மையத்தை  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணையமைச்சர் …