Friday, January 10 2025 | 01:17:44 PM
Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி பரிசளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது

Connect us on:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 34-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசு வழங்கும் விழா நாளை (2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை)  புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கத்தில் நடைபெறும்.

நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு விழாவிற்கு தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்குகின்றார்.  34வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி 2023-24-ன் தேசிய வெற்றியாளரான,கரக்பூர் (கொல்கத்தா பகுதி, கிழக்கு மண்டலம்) ஐ.ஐ.டி.யில் உள்ள பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், பரிசளிப்பு விழாவையொட்டி தங்கள் இளைஞர் நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சியை மீண்டும் நடத்திக் காட்டுவார்கள்.

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த 36 ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்காக இளைஞர் நாடாளுமன்ற போட்டிகளை நடத்தி வருகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான இளைஞர் நாடாளுமன்ற போட்டி திட்டத்தின் கீழ், 2023-24-ம் ஆண்டில் கேந்திரிய வித்யாலயாவின் 25 பிராந்தியங்களில் உள்ள 150 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 34வது போட்டி  நடத்தப்பட்டது.

சுய ஒழுக்கம், மாறுபட்ட கருத்துக்களை சகித்துக்கொள்ளும் தன்மை, நேர்மையான கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் ஜனநாயக வாழ்க்கை முறையின் பிற நற்பண்புகளை இளைய தலைமுறையினரிடையே ஊக்குவிப்பதே இளைஞர் நாடாளுமன்றத் திட்டத்தின் நோக்கமாகும். மேலும், இது நாடாளுமன்றத்தின் நடைமுறைகள், விவாதம் மற்றும் விவாதத்தின் நுட்பங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், அவர்களிடம் தன்னம்பிக்கை, தலைமைத்துவத்தின் தரம், திறமையான பேச்சாற்றலின் கலை, திறன் ஆகியவற்றை வளர்க்கவும் உதவுகிறது.

போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்ததற்கான “நேரு சுழற்கேடயம்” மற்றும் கோப்பை பிரதமரின் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா, ஐ.ஐ.டி, காரக்பூர் (கொல்கத்தா பகுதி, கிழக்கு மண்டலம்)-க்கு வழங்கப்படும்.மேலும், போட்டியில் மண்டல அளவில் முதலிடம் பெறும் கீழ்க்கண்ட 4 வித்யாலயா பள்ளிகளுக்கு அமைச்சர் கோப்பையை வழங்கவுள்ளார். தென் மண்டலத்தில் சென்னை பிராந்தியத்தில் ஆவடி கனரக தொழிற்சாலையில் உள்ள பிரதமரின் ஸ்ரீ கேந்திர வித்யாலயா பள்ளியும் கோப்பையை பெறவுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

திருச்சி என்ஐடி-யில் ஆறு நாள் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, செயல் மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் மற்றும் செயலாக்கக் கட்டுப்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆறு நாள் ஏ.ஐ.சி.டி.இ. அடல் ஆன்லைன் ஆசிரியர் …