Friday, January 10 2025 | 12:54:58 PM
Breaking News

வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025 புதுதில்லியில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது

Connect us on:

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இளைஞர் நலத்துறை 2025 ஜனவரி 10 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு புதுமையான தீர்வுகளை வழங்க இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று 30 லட்சம் இளைஞர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

இவர்களில் இருந்து பல நிலை தேர்வு முறை மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்க மொத்தம் 3,000 துடிப்பான, ஊக்கமளிக்கும் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 10, 2025 – கருப்பொருள் விளக்கக்காட்சிகள், சுற்றுலா மற்றும் கலாச்சார அனுபவங்களுடன் உரையாடல் பயணத்தைத் தொடங்குதல்

ஜனவரி 11, 2025 – அறிவார்ந்த ஈடுபாடு மற்றும் கலாச்சார கொண்டாட்டம்

கூடுதலாக, ஜனவரி11,12 ஆகிய தேதிகளில், மாநில, மத்திய அமைச்சகங்களின் இளைஞர்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளை காட்சிப்படுத்தும் வளர்ச்சியடைந்த இந்தியா கண்காட்சி நடைபெறும்.

ஜனவரி 12, 2025 –இந்தியாவின் எதிர்காலத்திற்கான அற்புதமான யோசனைகள் மற்றும் பார்வையை பிரதமருக்கு இளைஞர்கள் விளக்குகின்றனர்.

மாலையில் பிரதமர் தலைமையிலான மாபெரும் சந்திப்பு இந்த நாளின் மையமாக இருக்கும். அங்கு கூடி இருக்கும் மக்களிடையே உரையாற்றும் பிரதமர், இளைஞர்களை வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய ஊக்கப்படுத்துவார்.

About Matribhumi Samachar

Check Also

தகவல் அறியும் உரிமை தளம் சீராக செயல்படுகிறது

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை …