உயிர் செயல்திறன் சோதனைகள் மற்றும் நச்சுயியல் சோதனைகளின் அடிப்படையில் மத்திய அரசு உரக் கட்டுப்பாடு ஆணை-1985-ன் கீழ் நானோ டிஏபி திட்டத்தை அறிவிக்கை செய்துள்ளது.
விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
• விழிப்புணர்வு முகாம்கள், காணொலி கருத்தரங்குகள், நாடகங்கள், கள செயல் விளக்கங்கள், வேளாண் மாநாடுகள், பிராந்திய மொழிகளில் விளம்பர படங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் நானோ யூரியா பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
• நானோ யூரியா பிரதமரின் வேளாண் வள மையங்களில் கிடைக்கிறது.
• உரத்துறை தொடர்ந்து வெளியிடும் மாதாந்திர விநியோகத் திட்டத்தில் நானோ யூரியா சேர்க்கப்பட்டுள்ளது.
• 2023 நவம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான யாத்திரையின் போது நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
• ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்தின் கீழ், ட்ரோன்கள் மூலம் நானோ உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் 1094 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களவையில்இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்மத்திய ரசாயனம், உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.