Friday, January 09 2026 | 05:30:47 AM
Breaking News

சட்டப்பூர்வ நில உரிமையுடன் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் -65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் விநியோகம்

Connect us on:

“கிராமப்புற மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எனது அரசின் முன்னுரிமைப் பணியாகும்”

–பிரதமர் திரு நரேந்திர மோடி

2020 ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ்தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டம், கிராம பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு “உரிமைகப் பதிவு” வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நில எல்லை வரையரைக்கு, மேம்பட்ட ட்ரோன், ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த திட்டம் சொத்து பணமாக்குதலை ஊக்குவிக்கிறது. சொத்துகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதை இது எளிதாக்குகிறது. சொத்து தகராறுகளைக் குறைப்பதுடன் விரிவான கிராம அளவிலான திட்டமிடலை ஊக்குவிக்கிறது. உண்மையான கிராம சுயராஜ்யத்தை அடைவதற்கான ஒரு படியாக, இந்த முயற்சி கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கும் அதை தற்சார்பாக மாற்றுவதற்கும் சிறந்த கருவியாக உள்ளது!

2025 ஜனவரி 18 அன்று, தற்சார்பு இந்தியா தொலைநோக்கு பார்வையின் பிரதிபலிப்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் முன்னிலையில் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகளை மின்னணு முறையில் விநியோகித்தார். விழாவின் போது, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பயனாளிகளுடனும் உரையாடினார், நாடு முழுவதிலுமிருந்து பிரமுகர்கள் காணொலி முறையில் இதில் இணைந்தனர். இந்த நிகழ்வு ஸ்வாமித்வா திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. இது கிராமப்புற இந்தியாவை சட்டப்பூர்வ நில உரிமையுடன் மேம்படுத்துவதற்கான பார்வையை மேலும் மேம்படுத்துகிறது.

சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதி நிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துகளையும் சொத்து வரியையும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.

3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு கிராமங்களில் 92 சதவீதமாகும். இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களுக்கு, 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …