விமானம் தாங்கி போரக்கப்பலான ஐஎன்எஸ் துஷில் கப்பல் இந்திய கடற்படையில் 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடிலிருந்து அர்ப்பணிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்ரச் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்திய – ரஷ்ய நாடுகளின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஐ.என்.எஸ் துஷில் 1135.6 செயல்திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட கிரிவாக் III ரக போர்க்கப்பலாகும். இதில் ஆறு கப்பல்கள் ஏற்கனவே கடற்படையின் செயல்பாட்டில் உள்ளன. ஐஎன்எஸ் போர்க்கப்பல்கள் வரிசையில் இது 7-வது கப்பலாகும். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் கலினின்கிராட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகளை இந்திய நிபுணர்கள் குழு கண்காணித்தது.
கப்பல் கட்டுமானத்திற்கு பிந்தைய தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியான விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
கப்பலின் பெயரான துஷில், ‘பாதுகாப்பு கேடயம்’ என்றும் அதன் முகப்பு ஊடுருவ முடியாத கேடயம் என்றும் பொருள்படும் வகையில் அமைந்துள்ளது.