Thursday, January 08 2026 | 05:47:43 AM
Breaking News

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் கைத்தறி மாநாட்டை 28.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார்

Connect us on:

“கைத்தறி மாநாடு -மந்தன்” என்பது கைத்தறி துறையின் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடும்  நிகழ்வாகும். கைத்தறி நெசவாளர்கள்/உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தொடக்க நிறுவனர்கள், கைத்தறி தொழில்முனைவோர், கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள், மின்னணு வர்த்தக  நிறுவனங்கள், பிரதமரின் பண்ணாயிலிருந்து வெளிநாடு வரையிலான தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.  மாநாட்டில் 21 குழு உறுப்பினர்கள்,  நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் 120 கைத்தறி பயனாளிகள், நெசவாளர் சேவை மையங்கள், சுமார் 25 மாநில அரசுகள் என கிட்டத்தட்ட 250 பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள். ஜவுளி அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் (கைத்தறி, பட்டு & ஜவுளி) மற்றும் அதிகாரிகள். கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் உத்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைவதற்கும் ஒரு தளமாகச் செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த கைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் வளர்ச்சி இயந்திரமாக செயல்படும் அபரிமிதமான ஆற்றலுடன் கைத்தறி துறையை ஒரு முக்கிய துறையாக மேம்படுத்தவும் இது உதவும்.

தொடக்க விழாவிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …