Saturday, September 26 2026 | 04:34:33 PM
Breaking News

விஜய் சதுக்கத்தில் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்கள் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றன

Connect us on:

ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது. குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏனைய மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க 30 இந்திய பாடல்களை இசைக்கவுள்ளன. “கதம் கதம் பதாயே ஜா என்ற பாடலிசையுடன் தொடங்கி ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற பிரபலமான பாடலுடன் இந்த நிகழ்வு நிறைவடையும்.

விழாவின் முதன்மை நடத்துநராக கமாண்டர் மனோஜ் செபாஸ்டியன் இருப்பார். ஐஏ பேண்ட் நடத்துநராக சுபேதார் மேஜர் (கௌரவ கேப்டன்) பிஷன் பகதூர் இருப்பார். அதே நேரத்தில் எம் அந்தோணி, எம்.சி.பி.ஓ எம்.யு.எஸ் II இந்தியக் கடற்படை இசைக்குழுவின் நடத்துநராகவும், வாரண்ட் அதிகாரி அசோக் குமார் இந்திய விமானப்படை இசைக்குழுவின் நடத்துநராகவும் இருப்பார்கள்.  மத்திய ஆயுத காவல் படை இசைக்குழுவின் நடத்துநராக தலைமைக் கான்ஸ்டபிள் ஜி.டி மகாஜன் கைலாஷ் மாதவ ராவ் இருப்பார்.

About Matribhumi Samachar

Check Also

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாரம்பரிய அறிவும் மக்கள் பங்களிப்பும் அவசியம்: தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்!

புதுதில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் (NGT) ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்’ (Future of Environment …