பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படை கொடி நாள் ( நிதிக்கு தாராளமாக பங்களிக்க முன்வருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பணியாற்றிய மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களின் நலனை உறுதி செய்வதற்கான நாட்டின் கூட்டுப் பொறுப்பாகும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவ வீரர்களின் அசாத்தியமான தைரியம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை குடிமக்கள் அங்கீகரித்து, அதற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த நாளைக் கருத வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“எங்கள் ஆயுதப் படைகள் ஒரு அசைக்க முடியாத பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றன, இது ஒவ்வொரு சூழ்நிலையிலும் – வெளிப்புற அச்சுறுத்தல்கள் மட்டுமல்ல, இயற்கை பேரழிவுகளின் போதும் நம்மைப் பாதுகாக்க எப்போதும் தயாராக உள்ளது. அவர்களின் தியாகம் மற்றும் நமது வீரர்களின் ஒழுக்கம் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு ஆதாரமாக உள்ளது” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். படையினர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தும் வகையில், மக்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சமுதாய நலனுக்காக, நூறு கைகளால் சம்பாதிப்பதும், ஆயிரம் கைகளால் தானம் செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டைக் காக்க எல்லையில் வீரத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களையும், சீருடை அணிந்த வீரர்களையும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படை கொடிநாள் கொண்டாடப்படுகிறது. முன்னாள் படைவீரர் நலத்துறை, பாதுகாப்பு அமைச்சகம், போர் விதவைகள், வீழ்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலன் மற்றும் மறுவாழ்வுக்காக, ஊனமுற்றோர் உட்பட அவர்களின் அடையாளம் காணப்பட்ட தனிப்பட்ட தேவைகளான ஊதியம், குழந்தைகள் போன்றவற்றுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. கல்வி உதவித்தொகை, இறுதிச் சடங்கு உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை மற்றும் அனாதை/ஊனமுற்ற குழந்தைகளுக்கான உதவித்தொகை ஆகியவை இதில் அடங்கும்.