Wednesday, December 10 2025 | 06:33:19 AM
Breaking News

அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Connect us on:

அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்.

திரு அமித் ஷா தமது உரையில், குஜராத் லோக் சேவா அறக்கட்டளை 34 ஆண்டுகளை நிறைவு செய்து 35-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்றார். 35 ஆண்டுகளாக நல்ல நோக்கத்திற்காக தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார்.

அறிவு என்பது ஒரு சில எழுத்துக்களில் பொதிந்துள்ளது என்றும், உண்மையான ஞானம் என்பது தன்னிலிருந்து மற்றவர்களுக்கு மாறுவதிலும், தனக்கு முன்னதாக மற்றவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மற்றவர்களுக்காக உழைப்பதில்தான் மிகப்பெரிய ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்பதை மக்கள் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் புரிந்துகொள்வதாக அவர் கூறினார். மற்றவர்களுக்கு சேவை செய்யும் போக்குதான் ஒரு நபரின் மனம், ஆன்மா, அறிவு ஆகியவற்றுக்கு அமைதி ஏற்படுகிறது என்று திரு அமித் ஷா மேலும் கூறினார்.

கடந்த 34 ஆண்டுகளில், லோக் சேவா அறக்கட்டளை ஏழை மாணவர்களுக்கு உதவுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளித்தல், நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்குதல் என கிட்டத்தட்ட அனைத்து அரசு திட்டங்களுடனும் மக்களை இணைக்கும் ஒரு ஊடகமாக சேவை செய்து, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வாழ்க்கையை நன்கு மேம்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு முழுவதும் கோடிக் கணக்கான மக்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களை நலத்திட்டங்கள் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.

ஏழைகளின் நலன் என்ற தாரக மந்திரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அடையாளம் கண்டு அதை சமூகத்தின் அடிமட்ட அளவில் செயல்படுத்தினார் என்று அமைச்சர் கூறினார். அதனால்தான் நாட்டில் இன்று 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்ந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். எந்தவொரு அரசும் தனியாக இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்த முடியாது என்று அவர் மேலும் கூறினார். பல அறக்கட்டளைகள், தனிநபர்கள், சேவை சார்ந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளால் இது சாத்தியமானது என அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தில் பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களும், குருகுலங்களும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். குஜராத் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப ரத்த தானம், கண் தானம், உறுப்பு தானம் ஆகியவற்றில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது என அவர் குறிப்பிட்டார். குஜராத்தின் அடிப்படை மதிப்புகளும் நெறிமுறைகளும் மகாத்மா காந்தியின் போதனைகளையும் கோட்பாடுகளையும் இயல்பாகவே பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.