Wednesday, June 10 2026 | 12:22:40 PM
Breaking News

தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை ட்ராய் வெளியிட்டுள்ளது

Connect us on:

தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

இதன்படி, வணிக அமைப்புடன் நேரடி ஒப்பந்தம் செய்துகொள்வதற்குப் பதிலாக தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் கீழ், நெட்வொர்க் அங்கீகார அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விரிவான விதிமுறைகளை தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் கீழ், அறிவிக்கப்பட்ட விதிகள் மூலம் குறிப்பிட வேண்டும்.

அரசின் பாதுகாப்பு நலன் காரணத்தைத் தவிர இதர பரிந்துரைகளில் ஏதாவது மாற்றம் செய்வதற்கு மத்திய அரசானது ட்ராய் பரிந்துரைகளை பெற வேண்டும்.

தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் கீழ், டிஜிட்டல் தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குநர் அங்கீகாரம் என்பதை மத்திய அரசு அறிமுகம் செய்ய வேண்டும்.

ட்ராய் பரிந்துரைகள் அதன் இணையதளத்தில் (www.trai.gov.in)   வெளியிடப்பட்டுள்ளன. விளக்கம் அல்லது தகவலுக்கு இந்த ஆணையத்தின் ஆலோசகர் (நெட்வொர்க், அலைக்கற்றை, உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதியை 91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

About Matribhumi Samachar

Check Also

சென்னையின் ஆதம்பாக்கத்தில் சிஹ்சி ஃபார்மசி, ஐந்தாவது கிளை ‘மினி’ வடிவில் தொடக்கம்

சென்னை, 20 மே 2026 ஹெல்த்வாட்ச் டெலிடயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான சிஹ்சி ஃபார்மசி, சென்னையின் ஆதம்பாக்கம் பகுதியில் புதன்கிழமையன்று(மே …