இந்திய கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், அவற்றின் அணுகலை மேம்படுத்தவும் கலாச்சார அமைச்சகம் 2003-ம் ஆண்டில் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் போது கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தை நிறுவியது. இத் திட்டம் நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையில் தொடர பரிந்துரைக்கப்பட்டது. கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கம் தற்போது இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு வருகிறது. கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் கையெழுத்து பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தின் பங்களிப்புகளுடன் தேசிய கைப்பிரதிகள் இயக்கம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் https://www.pandulipipatala.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
கையெழுத்துப் பிரதிகள் சிதைவடைவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவற்றை லேமினேஷன், மறுசீரமைப்பு மற்றும் அமிலநீக்கம் போன்ற பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகள் பயன்படுத்துகின்றன. இதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கையேடு வள மையங்கள், ஓலைச்சுவடி பாதுகாப்பு மையங்கள் மண்டல கருப்பொருள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளைக் குறைக்க உதவுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.