Thursday, December 19 2024 | 12:28:36 PM
Breaking News

அஷ்டலட்சுமி மகோத்சவத்தில் எட்டு தொழில்நுட்ப அமர்வுகளை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

Connect us on:

வடகிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விவாதிக்க கள வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களாக இருந்த புகழ்பெற்ற குழு உறுப்பினர்களை ஒன்றிணைத்து முதலாவது அஷ்டலட்சுமி பெருவிழாவாவை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் 2024 டிசம்பர் 7 & 8 தேதிகளில் நடத்தியது. இதில்  எட்டு தொழில்நுட்ப அமர்வுகளுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பெண் தலைமைத்துவம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, சுகாதாரம், எரிசக்தி, கலாச்சாரம், கலை, விளையாட்டு போன்றவை  குறித்து ஒவ்வொரு நாளும் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன.

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வடகிழக்கின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக முதலாவது  தொழில்நுட்ப அமர்வின் தலைப்பு இருந்தது. இந்த அமர்வில்  வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு  அமைச்சர் திரு  ஜோதிராதித்யா எம் சிந்தியா, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, சிக்கிம் முதலமைச்சர் திரு. பிரேம் சிங் தமாங் ஆகியோர் வடகிழக்கு பிராந்தியத்திற்கான வளர்ச்சி கட்டமைப்பு தொடர்பாக தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாகவும் வடகிழக்கு பிராந்தியத்தின் பங்கை இந்த அமர்வு வலியுறுத்தியது. சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு, விரிவாக்கம்,  மத்திய அரசுக்கும் வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளுக்கும்  இடையேயான கூட்டாண்மை மூலம் நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கவனம் ஆகியவை இந்த அமர்வின் முக்கிய வெளிப்பாடாக இருந்தது.

நெகிழ்திறன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக வடகிழக்கில் பெண்களின் தலைமைத்துவம் என்பது இரண்டாவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பாகும். பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலா உள்ள தடைகளை அகற்ற விரிவான சீர்திருத்தங்களின் அவசியத்தை குழு வலியுறுத்தியது. அண்மைக்காலங்களில் இத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்  தலைமைத்துவம் மற்றும் தீர்மானிப்பதில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த அதிக முயற்சிகள் தேவை என கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க உடனடி நடவடிக்கை எடுப்பதும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவர்களின் முழு பங்களிப்பை அடைவதற்கான தடைகளை சரிசெய்வதும்  இந்த அமர்வின் முடிவாக இருந்தது.

மூன்றாவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பு, தொழில்நுட்ப தத்தெடுப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்தல் பற்றியதாகும். வடகிழக்கு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, ஐஓடி மற்றும் பிற டிஜிட்டல் கருவிகளின் மாறிவரும் திறனை குழு ஆராய்ந்தது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு பற்றாக்குறை, டிஜிட்டல் கல்வியறிவு இடைவெளிகள், மாற்றத்திற்கான எதிர்ப்பு போன்ற சவால்களை இது எடுத்துரைத்தது. இந்த சவால்களை சமாளிப்பதற்கான ஒரு வரைபடத்தை நிறுவுதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதற்கான பிராந்திய தேவைகளுக்கு தொழில்நுட்பங்களை மாற்றியமைத்தல் ஆகியவை அமர்வின் விளைவாக இருந்தன.

வடகிழக்கு இந்தியாவில் பொது சுகாதார சேவைகள் விநியோகத்தை வலுப்படுத்துவது நான்காவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பாகவும், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானத்திற்கான எரிசக்தி கலவையை பல்வகைப்படுத்துவது ஐந்தாவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பாகவும், சமகால வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆறாவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான கலை, கைவினை, இசை மற்றும் விழாக்களை மேம்படுத்துவது ஏழாவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பாகவும் வடகிழக்கு இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மற்றும் ஒரு பெரிய விளையாட்டு மையமாக விளங்கும் திறன் எட்டாவது தொழில்நுட்ப அமர்வின் தலைப்பாகவும் இருந்தன.

About Matribhumi Samachar

Check Also

மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்

மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக …