Saturday, December 06 2025 | 03:58:04 AM
Breaking News

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய நூலின் இரண்டாம் தொகுதி – நாளை வெளியிடுகிறார் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Connect us on:

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் இரண்டாம் பகுதியான விங்ஸ் டூ அவர் ஹோப்ஸ் –  (Wings to Our Hopes – Volume 2) என்ற நூலையும் அதன் இந்தி மொழி பதிப்பான ஆஷான் கி உடான் (Ashaon Ki Udaan – Khand 2) என்ற நூலையும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் நாளை (23.06.2025) வெளியிடுகிறார்.

இந்த நூல் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் 51 உரைகளில் இருந்து தொகுக்கப்பட்ட நூலாகும். இது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பதவியேற்ற இரண்டாவது ஆண்டில் (ஆகஸ்ட் 2023 முதல் ஜூலை 2024 வரை) அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகளைக் கொண்ட நூலாகும். இந்த நூல் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையையும், தத்துவ சிந்தனைகளையும் தொகுத்து வழங்குகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையால் தொகுக்கப்பட்டு, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்படும் இந்தத் தொகுதி, ஆட்சி நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்ககிய தன்மை போன்றவற்றில் குடியரசுத் தலைவரின் கருத்துகளை எடுத்துரைக்கிறது.

குடியரசுத் தலைவர் உரைகள் அடங்கிய இரண்டாவது தொகுதி, இந்தியிலும் ஆங்கிலத்திலும், மின் பதிப்புடன் 2025 ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நடைபெறும் விழாவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கால் வெளியிடப்படும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு எல். முருகன் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்வார்கள்.

புத்தக வெளியீட்டுப் பிரிவு பற்றி:

மத்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவால் பலவகையான நூல்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான இது, பொது நலன், தேசிய சுதந்திர இயக்கம், கலாச்சாரம், கலை, இலக்கியம் தொடர்பான பல்வேறு பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை ஆவணப்படுத்துவதில் இந்த வெளியீட்டுப் பிரிவு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

About Matribhumi Samachar

Check Also

பொது கொள்முதல் குறித்து ஐடிஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வு – அரசு மின் சந்தை தளம் சார்பில் நடத்தப்பட்டது

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி …