Sunday, December 07 2025 | 01:08:06 AM
Breaking News

யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்

Connect us on:

யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில்  மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.  யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் பாதுகாப்புக்கான வழிகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மனித பாதுகாப்புக்கும் யானைகள் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ள மனித – யானை மோதல் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்பில், குறிப்பாக மனித-வனவிலங்கு மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், உள்ளூர் மக்களை தீவிரமாக ஈடுபடுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் சுட்டிக்காட்டினார். மனித வனவிலங்கு மோதலை திறம்பட நிர்வகிப்பது வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களின் வெற்றிக்கு மிக முக்கியமானது என்று அவர் கூறினார். முன்னணி வன ஊழியர்கள்,  கள பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பணி நிலைமைகளை மேம்படுத்தவும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் கூறினார்.

மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்க ரயில்வே, மின்சார அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சுரங்க நிறுவங்கள் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 99.86 சதவீத படிவங்கள் விநியோகம்

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,40,24,854 படிவங்கள் …