அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு (2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது) (-) 0.13%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025 ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் முதன்மையாக உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக ஏற்பட்டதாகும். அனைத்து பொருட்கள் மற்றும் மொத்த விலைக் குறியீடு தொடர்பான அம்சங்களின் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க விகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
குறியீட்டு எண்கள் மற்றும் ஆண்டுப் பணவீக்க விகிதம் (வருடாந்திர சதவீதத்தில்) *
| குறியீட்டு எண்கள் மற்றும் ஆண்டுப் பணவீக்க விகிதம் (வருடாந்திர சதவீதத்தில்) * | |||||||
|
அனைத்து பொருட்கள் / முக்கிய குழுக்கள் |
எடை (%) | ஏப்ரல்-25 (இறுதி) |
மே-25 (தற்காலிகம்) | ஜூன் -25 (தற்காலிகம்) | |||
| குறியீடு | பண
வீக்கம் |
குறியீடு | பண
வீக்கம் |
குறியீடு | பண
வீக்கம் |
||
| அனைத்துப் பொருட்கள் | 100 | 154.2 | 0.85 | 154.1 | 0.39 | 153.8 | -0.13 |
| I. முதன்மைப் பொருட்கள் / சரக்குகள் | 22.62 | 185.4 | -0.91 | 184.3 | -2.02 | 185.8 | -3.38 |
| II. எரிபொருள் & மின்சாரம் | 13.15 | 145.7 | -3.76 | 146.7 | -2.27 | 143.0 | -2.65 |
| III. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் | 64.23 | 144.9 | 2.62 | 144.9 | 2.04 | 144.8 | 1.97 |
| உணவு குறியீடு | 24.38 | 190.7 | 3.30 | 189.5 | 1.72 | 190.2 | -0.26 |
Matribhumi Samachar Tamil

