Monday, December 08 2025 | 08:31:37 PM
Breaking News

நாட்டிலேயே எடை குறைந்த சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது

Connect us on:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை உருவாக்கி அதை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த சக்கர நாற்காலி இது என ஐஐடி கூறியுள்ளது. இந்த ஒற்றை குழாய் திட அமைப்பு (‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’) சக்கர நாற்காலி உள்நாட்டிலேயே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டதாகும்.

சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, பயனாளிகளின் உடல் அமைப்புக்கும், அவர்களின் தினசரி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ப வடிவமக்கப்பட்டுள்ளது. 9 கிலோகிராம் எடை மட்டுமே கொண்ட இந்த சக்கர நாற்காலி, அதிகபட்ச வலிமையையும், திறனையும் கொண்டதாகும்.  கார்கள், ஆட்டோக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் இதை கையாளுதல் மிக எளிதாக இருக்கும்.

 அறிமுக நிகழ்ச்சியில் ஆயுதப் படை மருத்துவமனை சேவைகள் பிரிவு  தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இந்த சக்கர நாற்காலி திட்ட ஒருங்கிணைப்பாளரும் சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியருமான டாக்டர் மணீஷ் ஆனந்த், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விஞ்ஞானி டாக்டர் ரவீந்திரசிங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒய்டி ஒன்-ஐ அறிமுகம் செய்வதில் ட்ரிம்பிள் நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 20 சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளது. இதுதவிர எதிர்காலத்தில் தேவைப்படுவோருக்கு உதவ ஆர்ஆர்டி, ஸ்யூக்கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

About Matribhumi Samachar

Check Also

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் …