Tuesday, December 09 2025 | 06:55:07 AM
Breaking News

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது

Connect us on:

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.  இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். வேளாண் உற்பத்தி அமைப்புகள், மண்வள நிர்வாகம், பருவநிலை ஏற்பு மற்றும் தணிப்பு, வாழ்வாதார திட்டங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சிக்கான முன் முயற்சிகளில் நபார்டு மேற்கொண்டு வரும் சேவைகளையும் அமைச்சர் பாராட்டினார்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், மத்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், பவளப்பாறை, மாங்ரோவ் சூழலை மீட்டெடுத்தல், மண்வளம், பழங்குடியினர் மேம்பாடு போன்றவற்றில் எம். எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை உடனான நபார்டு வங்கியின் ஒத்துழைப்பை நினைவு கூர்ந்தார்.

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு ஆர் ஆனந்த் தமது உரையில், உள்கட்டமைப்பு உருவாக்கம், வேளாண்மைக்கு மறு நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்காக தமிழ்நாட்டிற்கு 2024-25 நிதியாண்டில் ரூ. 50,000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் இது, மற்ற எந்த மாநிலத்தைவிடவும் கூடுதலாகும் என்றும் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கி பொது மேலாளர் திரு வி. சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விருதுநகரில் உள்ள சீட்ஸ் அமைப்பு, பச்சைமலையைச் சேர்ந்த ஷாலோம், தர்மபுரியில் உள்ள டீப்ஸ் உள்ளிட்ட சிறந்த வேளாண் உற்பத்தி அமைப்புகள், ஊரக நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை …