Thursday, December 11 2025 | 04:23:14 PM
Breaking News

காசியாபாத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தில் மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு பயிலரங்கு தொடங்கியது

Connect us on:

ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (PCIM&H), “மூலிகை மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை” (பணிக்குழு-1) மற்றும் “மூலிகை மருந்துகளின் செயல்திறன் மற்றும் நோக்கம் கொண்ட பயன்பாடு” (பணிக்குழு-3) குறித்த உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பின் பயிலரங்கின் தொடக்க அமர்வை இன்று காஜியாபாத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் நடத்தியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கை ஆயுஷ் அமைச்சகமும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகள் முழுவதிலுமிருந்து நிபுணர்களை ஒன்றிணைத்து, ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பு, தர உறுதி மற்றும் பாரம்பரிய சுகாதார அமைப்புகளில் மூலிகை மருந்துகளின் மருத்துவ பொருத்தம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதை இந்தப்  பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா, ஆயுஷ் அமைப்புகளை அறிவியல் ரீதியாக சரிபார்ப்பதற்கும் உலகளாவிய முறையில் ஏற்றுக்கொள்வதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். “பணிக்குழு 1 மற்றும் பணிக்குழு 3க்கான முன்னணி நாடாக, உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பு தளத்தின் மூலம் சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா ஆழமாக ஈடுபட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரும், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத் தலைவருமான டாக்டர் கிம் சுங்சோல், மூலிகை மருத்துவத்தில் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் தரங்களை வலுப்படுத்துவதில் உலகளாவிய ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனலிசா தாஸ், பாரம்பரிய மருத்துவத்தில் சர்வதேச அளவுகோல்களை வடிவமைப்பதில் இந்திய ஒழுங்குமுறை மற்றும் மருந்தியல் நிறுவனங்களின் பங்கை எடுத்துரைத்தார்.

About Matribhumi Samachar

Check Also

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த …