புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
தனித்தனியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“திரு ராம்நாத் கோயங்காவை பொருத்தவரை தேசம் முதலில் என்பது எப்போதும் அவரது கருத்தாக இருந்தது. எது சரியோ, எது சத்தியமோ அதன் பக்கம் அவர் நின்றார். அனைத்துக்கும் மேலானதாக கடமையை அவர் முன்வைத்தார்.”
“அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தனர். இன்னும் சிறப்பாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.”
“இந்தியாவின் வளர்ச்சி மாதிரி என்பது உலகத்திற்கு நம்பிக்கை அளிக்கும் மாதிரியாக பார்க்கப்படுகிறது.”
“தேர்தலில் வெற்றிபெற ஒருவர் 24 மணி நேரமும், தேர்தல் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியதில்லை. ஒருவர் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும், மக்களின் தேவைகளைப் புரிந்திருக்க வேண்டும்.”
“மாவோயிச தாக்கம் சுருங்கி வருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.”
“வாருங்கள், காலனிய மனநிலையிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள நாம் கூட்டாக தீர்மானிப்போம். காலனிய மனநிலை அடிமை மனநிலையைத் தவிர வேறு எதுவும் இல்லை.”
Matribhumi Samachar Tamil

