Tuesday, January 06 2026 | 12:58:23 AM
Breaking News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 24 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

Connect us on:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,50,24,723 கணக்கெடுப்பு படிவங்கள் (99.07%) இதுவரை (2025 நவம்பர் 24) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,32,828 வாக்குச் சாவடி அலுவலர்கள், 11,40,598 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,16,90,765 கணக்கெடுப்பு படிவங்கள் (96.22%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3,19,70,385 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 9,76,431 படிவங்கள் (95.58%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,96,288 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …