எதிர்கால பொருளாதாரத்தை வடிவமைக்கக்கூடிய அரசின் மாற்றத்தக்க தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்தும் நம்பிக்கைக்குரிய உலகளாவிய கூட்டாளியாக உருவெடுக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தாம் அண்மையில் எழுதிய கட்டுரையில், இணக்கங்களை எளிமைப்படுத்தியுள்ள, பெண் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தக்கூடிய இந்த சீர்திருத்தங்களின் நீண்டகால தாக்கத்தை பிரதிபலித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உலகளாவிய நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உருவெடுப்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. எதிர்கால பொருளாதாரம், இணக்கங்களை எளிமைப்படுத்துவது, பெண் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது ஆகிய உறுதிப்பாட்டை அரசு இயற்றியுள்ள புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் பிரதிபலிக்கின்றன!
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள நுண்ணறிவு மிக்க இக்கட்டுரை மூலம் சிந்திக்கவும்.”
Matribhumi Samachar Tamil

