Tuesday, December 09 2025 | 09:33:29 PM
Breaking News

அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையைக் குறிப்பிட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

Connect us on:

அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட அளவீட்டு (பொட்டலப் பொருள்கள்) இரண்டாவது (திருத்தம்) விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது அதற்குக் குறைவான சிறிய பொட்டலங்களுக்கு முன்பு விலைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், புதிய விதியின்படி அனைத்துச் சிறிய பான் மசாலா பொட்டலங்கள் உட்பட அனைத்துக் கட்டாய அறிவிப்புகளையும் அச்சிட வேண்டும்.

இந்த நடவடிக்கை மூலம், அனைத்துப்  அளவுள்ள பொட்டலங்களிலும் வெளிப்படையான விலைத் தகவலை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது. மேலும், பான் மசாலாவுக்கு சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்ட ஜிஎஸ்டி வரியைச் சீராக அமல்படுத்தி, வரி வருவாயை முறையாக வசூலிக்கவும் இந்த உத்தரவு உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை …