Monday, December 29 2025 | 10:41:42 AM
Breaking News

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமிலான உயர்மட்ட குழு பஞ்சாயத்து அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ₹507.37 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது

Connect us on:

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் இயங்கும் உயர்மட்டக் குழு, 20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பேரிடர் அபாயக் குறைப்பு  முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்திற்கு ரூ.507.37 கோடி நிதிக்கு இன்று (டிசம்பர் 16) ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு பேரிடரையும் தாங்கும் வகையில் சமூகத்தை வலுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்படி, பேரிடர் மேலாண்மைக்குப் பங்களிக்கும் வகையில் சமூகத்தின் அடித்தட்டு அளவில் அணுகுமுறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

இந்தத் திட்டம், 20 மாநிலங்களில் உள்ள பேரிடர் அபாயமுள்ள 81 மாவட்டங்களை உள்ளடக்கும். மேலும், உள்ளூர் DRR-க்கான மாதிரிகளாகச் செயல்பட, 20 கிராம பஞ்சாயத்துகள் மேம்படுத்தப்படும்.

மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.507.37 கோடியில், தேசியப் பேரிடர் தணிப்பு நிதியில்  இருந்து ரூ.273.38 கோடியும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மூலம் ரூ.151.47 கோடியும் மத்தியப் பங்காக வழங்கப்படும். மீதமுள்ள நிதி மாநில அரசுகளின் பங்காக இருக்கும்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளில், பேரிடர் அபாயக் குறைப்பை மேம்பாட்டுத் திட்டங்களில் ஒருங்கிணைத்தல், திறன் மேம்பாடு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். மாநிலங்களுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட மாநிலப் பேரிடர் பதிலளிப்பு நிதி  மற்றும் தேசியப் பேரிடர் பதிலளிப்பு நிதி  தவிர, இந்தக் கூடுதல் உதவி வழங்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம்.  சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் …