Sunday, December 28 2025 | 03:22:02 AM
Breaking News

உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்

Connect us on:

குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது:

முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த  ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை  கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை  நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் வகுப்பு வரை அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக ஆதிதிராவிட மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள், தொடக்க, இடைநிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயன்முறை – முதல் வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வ. எண் ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்ட எஸ்.சி., மாணவர்கள்
1 2022-23 1,468
2 2023-24 2,543
3 2024-25 2,961
மொத்தம் 6,972

மத்திய அரசின் திட்டம் என்பதால், 2021-22 முதல் 2023-24-ம் ஆண்டு வரை மாநில வாரியாக நிதி ஒதுக்கீட்டிற்கான தரவுகள் மற்றும் நிதி விடுவிப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

(ரூ. கோடியில்)

வ. எண் ஆண்டுகள் திருத்திய மதிப்பீடு செலவு
1 2021-22 63.21 38.04
2 2022-23 89.00 51.12
3 2023-24 90.65 81.57
மொத்தம் 242.86 170.73

இத்திட்டத்தின் இரண்டு முறைகளின் கீழ் உள்ள மொத்த உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

முறை-1 246
முறை-2 51
மொத்தம் 297

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிட்ட பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வு, 2022 மற்றும் 2023 ஆகியவற்றின் முடிவுகள் …