Wednesday, December 10 2025 | 07:18:13 AM
Breaking News

உள்நாட்டு கோக்கிங் நிலக்கரி உற்பத்தி

Connect us on:

2023-24-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி 66.821 மில்லியன் டன் ஆகும். 2024-25-ம் நிதியாண்டில் உள்நாட்டு கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தி இலக்கு 77 மில்லியன் டன் ஆகும்.

நிலக்கரி இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை  மத்திய நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது:

எஃகுத் துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கச்சா  நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும் வகையிலும் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் நிலக்கரி உற்பத்தித் திட்டத்தை  அந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயக்கம் 2029-30-ம் நிதியாண்டில் உள்நாட்டிலேயே கச்சா கோக்கிங் நிலக்கரி உற்பத்தியை 140 மெட்ரிக் டன் வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய நிலக்கரி நிறுவனம் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து 2029-30-ம் நிதியாண்டில் கச்சா நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான இலக்கை 105 மில்லியன் டன்னாக நிர்ணயித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த …