ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில், ஒரு வீடியோவைப் பகிர்ந்து, அவர் கூறியுள்ளதாவது:
“ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது கிராமப்புறங்களில் பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது என்பது பற்றிய ஒரு சிறந்த கண்ணோட்டம்.
தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும்”.