இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) விதிமுறைகள், அதாவது தொலைத் தொடர்பு வர்த்தகத் தகவல் தொடர்பு நுகர்வோர் விருப்ப விதிமுறைகள், 2018 (டி.சி.சி.சி.பி.ஆர் -2018) ஆகிய சட்டங்களில் போலியான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் குறித்த புகார்களை கையாள்கிறது. இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்பு சந்தாதாரர் அனைத்து வர்த்தக தகவல் தொடர்புகளையும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யயவும் வேண்டாத அழைப்புகளை தடுக்கவோ வகை செய்யப்பட்டுள்ளது. போலியான செய்திகளை அனுப்புபவர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்யவும் இது வழி வகுக்கிறது. இது தொடர்பான புகார்களை குறுஞ்செய்தி மூலம் 1909 என்ற எண்ணில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தொலைத் தொடர்புச் சட்டங்களின் விதிமுறைகளை மீறியதாக புகார் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்தல்.
- பதிவு செய்யப்படாத தொலைத் தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது எச்சரிக்கை கொடுப்பது, விதிமுறை மீறல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்களது சேவையைத் துண்டிப்பது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.