இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (2013 ஆம் ஆண்டின் 18) 92 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தனது கள அலுவலகங்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் போது, இந்திய தொல்லியல் துறையின் கள அலுவலகங்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள் நினைவுச்சின்னங்களைப் பாதிக்கும் காரணியாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. . மேலும், நினைவுச் சின்னங்களில் பல்நோக்குப் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய தொல்லியல் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்புக் கொள்கை, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான வழக்கமான ஆய்வுகளை வரையறுக்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.