Thursday, December 19 2024 | 12:22:49 PM
Breaking News

கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள்

Connect us on:

நாட்டின் மேன்மையான கலாச்சார உறவுகளை பிற நாடுகளிடையே பரப்புவதற்கான முயற்சிகளை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலால் மேம்பட்டு வருகிறது. பல்வேறு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் பல ஆண்டுகளாக வலுப்பெற்றுள்ள இந்த நல்லுறவுகள் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

  1. இருதரப்பு கலாசார உடன்படிக்கைகள்/கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
  2. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜி20, பிம்ஸ்டெக், சார்க், ஆசியான் போன்ற பல்வேறு தளங்களில் கலாச்சார ஒத்துழைப்பு.
  3. (i) வெளிநாடுகளில் இந்திய கலாச்சார விழாவை ஏற்பாடு செய்தல் (ii) இந்திய-அயல்நாட்டு நட்புறவு கலாச்சார சங்கங்களுக்கு மானிய உதவி வழங்குதல் ஆகிய இரண்டு அம்சங்களுடன் கலாச்சாரப் பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்

மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக …