Tuesday, March 11 2025 | 11:02:59 AM
Breaking News

உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு

Connect us on:

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு  2024 டிசம்பர் 12-ம் தேதி  சர்வதேச அளவிலான ஆராய்ச்சி வலைதள அமைப்பில் புதிய உறுப்பினர்களாக பதினொரு துறை சார்ந்த வல்லுநர்களை தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த 11 பேரில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தில் இணை பேராசிரியர்களாக பணி பரிந்து வரும் டாக்டர் பிரேம் கௌஷல், டாக்டர் ராஜேந்தர் மோத்தியானி ஆகியோர் சர்வதேச உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி வலைதள அமைப்பின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் நுண்ணுயிரிகள், மைக்கோபாக்டீரியம் காசநோய், எண்டமீபா ஹிஸ்டோலிடிகா போன்ற கிருமிகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் டாக்டர் பிரேம் கௌஷல் கவனம் செலுத்தி வருகிறார். தோல் நிறமியில் கால்சியம் உந்துசக்தி உட்புற உடல்கூறுகளின் செயல்பாடுகள் போன்றவற்றை புரிந்து கொள்வதில் டாக்டர் ராஜேந்தர் மோத்தியானி ஆராய்ச்சிகள் கவனம் செலுத்துகிறது.

இந்த சர்வதேச அமைப்பு சிலி, இந்தியா, சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளில் உள்ள இளம் விஞ்ஞானிகளின் குழுவின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுகிறது.

About Matribhumi Samachar

Check Also

மத்திய அமைச்சர் எஸ். பூபேந்தர் யாதவ் புதுதில்லியில் தலைமைத்துவ மாநாட்டில் தலைமைத்துவத்தின் முக்கிய மதிப்புகளை எடுத்துரைத்தார்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று நடைபெற்ற  தலைமைத்துவ மாநாட்டில், பயனுள்ள தலைமை, சுய ஒழுக்கம் மற்றும் …