ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு 14 டிசம்பர் 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்றது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக (ஆர்ஓ) இருந்தார். பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு , அவர் பட்டங்களை வழங்கினார். 178 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 204 வீரர்கள் இன்று பட்டம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஆகியோருக்கு பறக்கும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக ‘விங்ஸ்’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நாள் இந்திய விமானப்படை வரலாற்றில் நினைவுகூரப்படும், ஆயுத அமைப்புகள் கிளை அதிகாரிகளின் முதல் தொகுதி இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்டது. இந்த விழாவை பிரமுகர்கள் மற்றும் பட்டம் பெற்ற அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பின் உச்சம் ‘ஆணையிடும் விழா’ ஆகும், பட்டம் பெற்ற கேடட்களுக்கு ஆய்வு ஆதிகாரியால், அவர்களின் ‘தரவரிசை’ வழங்கப்பட்டது. அகாடமியின் தளபதியால் பட்டம் பெற்ற அதிகாரிகளுக்கு ஒரு உறுதிமொழி வழங்கப்பட்டது. அதன்படி அவர்கள் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதாக உறுதியளித்தனர்.
பல்வேறு பயிற்சி பிரிவுகளில் அவர்களின் சிறப்பான செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், பட்டம் பெற்ற அதிகாரிகளுக்கு ஆய்வு அதிகாரி விருதுகளை வழங்கினார்.
அணிவகுப்பில் உரையாற்றிய ஆய்வு அதிகாரி, உயர் தரத்திற்காக அணிவகுப்பில் உள்ள அனைவரையும் பாராட்டினார் மற்றும் அவர்களின் மாசற்ற வருகை மற்றும் மிருதுவான பயிற்சி இயக்கங்களைப் பாராட்டினார். பட்டம் பெற்ற அதிகாரிகளை வாழ்த்திய அவர் கேடட்களை ஒழுக்கமான, தன்னம்பிக்கை மற்றும் கற்றறிந்த நபர்களாக மாற்றியுள்ளது மற்றும் தேவையான திறன்கள், உளவியல் மற்றும் அணுகுமுறையை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்று கூறினார்.