Tuesday, December 30 2025 | 01:44:30 AM
Breaking News

வெற்றி தினத்தையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்

Connect us on:

பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்தியாவின் வரலாற்று வெற்றியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ஆம் நாள் வெற்றி தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, 1971-ம் ஆண்டு போரில் உயிர்தியாகம் செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் கதைகளைக் கொண்ட துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு நன்றியுடன் நினைவில் கொள்கிறது என்றும், அவர்களுடைய தியாகம் நாட்டின் பெருமிதத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றி தினத்தில் ஆயுதப்படையினரின் ஈடுஇணையற்ற துணிச்சலை கௌரவிப்பதாகவும், வீர்ர்களின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தியாகம், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக திகழ்கிறது என்றும், அவர்களுடைய சேவைக்கு நாடு என்றும் நாடு கடன்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், வீரர்களின் துணிச்சல், தியாகத்தை கௌரவிப்பதாகவும், அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, உறுதியுடன் கூடிய உத்வேகம் நாட்டைப் பாதுகாத்து பெருமை சேர்த்துள்ளது என்று கூறியுள்ளார். அவர்களின் அசாதாரண வீரம், உறுதியுடன் கூடிய உத்வேகத்திற்கு  மரியாதை செலுத்தும் நாள் இந்நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப்படையினரின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றிடும் வகையில், அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வீரர்களின் துணிச்சலும், தேசபக்தியும் நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாக கூறினார். அவர்களின் தியாகத்தையும், சேவையையும் நாடு என்றும் மறவாது என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு.சஞ்சய் சேத், முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங், பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகியோரும் வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

About Matribhumi Samachar

Check Also

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம்.  சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் …