மாவட்டந் தோறும் தலா ஒரு அஞ்சலக ஏற்றுமதி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அஞ்சலகங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக இதுவரை நாடு முழுவதும் 1013 அஞ்சலக ஏற்றுமதி மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த மையங்கள் எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகத்திற்கு உதவுவதுடன், கைவினைஞர்கள், நெசவாளர்கள், உள்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளை அடைய உதவுகின்றன.
ரத்தினக் கற்கள், செயற்கை கற்களுடன் கூடிய நகைகள், துணி, ஆடைகள், தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆயுர்வேத மற்றும் மூலிகை பொருட்கள், மசாலாப் பொருட்கள், இசைக்கருவிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபகரணங்கள், தேயிலை, காபி, பிற நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன;
இதற்கென அஞ்சல் துறை பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 41 நாடுகளுக்கு ‘சர்வதேச தொகுப்பு சேவையை’ தொடங்கியுள்ளது. 2023-24-ம் ஆண்டில் சுமார் 13.48 லட்சம் ஏற்றுமதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.