Thursday, December 19 2024 | 09:40:27 AM
Breaking News

பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்

Connect us on:

2024 நவம்பர் 30 அன்றைய நிலவரப்படி பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பின்வருமாறு;

வகை          பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை

பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள்                             8,672

பட்டியலிடப்படாத பொதுத் துறை நிறுவனங்கள்                        46,939

ஒரு நபர் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்        11,11,040

பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம், நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்கள் சட்டம், 2013-ல் பின்வரும் விதிகளை சேர்த்துள்ளது.

நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 149 துணைப்பிரிவு (1)-ன் கீழ், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) விதிகள், 2024-ன் விதி 3-ன் படி, ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ.300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் மற்ற ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தது ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கும் மற்றும் நிறுவனத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 172-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கு வகை செய்கிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

நகரக் கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு

நகரக் கூட்டுறவு வங்கிகள் சந்தித்து வரும் இடர்ப்பாடுகளைக் களைவதற்கு  ஓர் அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் உணரப்பட்டது. நகரக் கூட்டுறவு …