பாரத் நெட் திட்டம் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குகிறது. டிஜிட்டல் பாரத் நிதியத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் பாரத் நெட் உத்யாமிஸ் எனப்படும் உள்ளூர் கூட்டாளர்கள் / தொழில்முனைவோர் மூலம் பாரத்நெட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகள் / கிராமங்களில் அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்புகளை வழங்கியுள்ளது.
28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து 2.64 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் சுமார் 3.8 லட்சம் கிராமங்களுக்கு தேவை அடிப்படையில் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க பாரத் நெட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ.1,39,579 கோடி செலவில் திருத்தப்பட்ட பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 04.08.2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்புகளை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாரத் நெட் உத்யாமிஸ் மாதிரியைப் பயன்படுத்தி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் 1.5 கோடி கண்ணாடி இழை நார் இணைய இணைப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.