நாட்டில் தொலைத் தொடர்பு சதனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் தொலைத் தொடர்புத் துறையில் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இறக்குமதியைக் குறைப்பதற்காக, தொலைத்தொடர்பு மற்றும் கட்டமைப்பு தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 2021 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு
மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.12,195 கோடி.
மொத்தம் 33 தொலைத்தொடர்பு மற்றும் கட்டமைப்பு சாதனங்களின் உற்பத்தி.
4 முதல் 7% வரை ஊக்கத்தொகை.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு கூடுதலாக 1% ஊக்கத்தொகை.
‘இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட’ தயாரிப்புகளுக்கு கூடுதலாக 1% ஊக்கத்தொகை.
30.09.2024 நிலவரப்படி, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களின் ஏற்றுமதி ரூ.12,384 கோடி உட்பட ரூ.65,320 கோடி விற்பனை எட்டப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.