Friday, December 20 2024 | 09:47:15 PM
Breaking News

நாடாளுமன்ற கேள்வி:- தேசிய பல்லுயிர் செயல்திட்டம்

Connect us on:

கொலம்பியாவின் காலியில் அண்மையில் நடைபெற்ற ஐநா பல்லுயிர் பெருக்க மாநாட்டின் போது இந்தியா தனது தேசிய பல்லுயிர் உத்தி, செயல் திட்டத்தை சமர்ப்பித்தது.

இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி செயல் திட்டம் (NBSAP) பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, பயன் பகிர்வு ஆகியவற்றை விரிவாக கவனிக்கிறது, நிலப்பரப்பு, கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், மாசு கட்டுப்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

23 மத்திய அமைச்சகங்கள், பல தேசிய, மாநில அளவிலான அமைப்புகள், சமூகங்கள், பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய பரந்த ஆலோசனை செயல்முறையின் மூலம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

நாடாளுமன்ற கேள்வி:- வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி

வனவிலங்கு வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், மனித-வனவிலங்கு மோதலை தடுப்பதற்கும் ‘வனவிலங்கு வாழ்விடங்களின் மேம்பாடு’, ‘புலிகள் – யானைகள் திட்டம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதியுதவி பெற்ற ‘ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விட …