மாநில சட்டமுறை எடையளவு துறைகள் மற்றும் அதன் இணைய தளங்களை ஒருங்கிணைத்து தேசிய சட்டமுறை எடையியல் இணையதளத்தை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கி வருகிறது. இந்த இணையதளத்தில் வர்த்தக உரிமங்கள் வழங்குதல், சரிபார்ப்பு, அதன் அமலாக்கம் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவற்றை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், தேசிய சட்டமுறை எடையியல் இணையதள பங்குதாரர்கள் பல மாநில இணையதளங்களில் பதிவு செய்வதற்கான தேவையை இல்லாமல் ஆக்குகிறது. இது வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதுடன் அதன் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.
தற்போது, மாநில அரசுகள் பொதியில் உள்ள பொருட்களைப் பதிவு செய்தல், உரிமங்கள் வழங்குதல் எடை, அளவிடும் கருவியை சரிபார்த்தல் / முத்திரையிடுதல் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே, நுகர்வோர் விவகாரங்கள் துறை அனைத்து மாநில இணைய தளங்களையும் ஒருங்கிணைத்து தேசிய சட்டமுறை எடையளவு என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கி வருகிறது. இந்த இணைய தளத்தில் சட்டமுறை எடையளவு துறையின் அனைத்து செயல்பாடுகளான அமலாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த புள்ளி விவரத்தை பெற உதவுதல் ஆகியவை அடங்கும்.