முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பியான முன்னாள் பிரதமர் பாரத ரத்னா சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தாழ்மையுடன் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”