Wednesday, December 25 2024 | 10:10:50 PM
Breaking News

சிறந்த தகவல் தொடர்புக்கான 8 தேசிய விருதுகளை வென்றது செயில் நிறுவனம்

Connect us on:

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு (செயில்-SAIL) இந்திய மக்கள் தொடர்பியல் சங்கம்  எட்டு தேசிய விருதுகளை வழங்கியுள்ளது.

அந்த சங்கத்தின் தேசிய விருதுகள் 2024 டிசம்பர் 20-22,  ஆகிய தேதிகளில் ராய்ப்பூரில் நடைபெற்ற 46-வது அகில இந்திய மக்கள் தொடர்பியல் மாநாட்டில் வழங்கப்பட்டன. செயில் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்டு  விருதுகள் வழங்கப்பட்டன. மின்-செய்திமடல், பெருநிறுவனப் படம் (ஆங்கிலம்), செயில் கௌரவ தின கொண்டாட்டத்திற்கான சிறந்த தகவல் தொடர்பு இயக்கங்கள் (உள்ளகத்தில் இருப்போர்), செயில் செய்திகளுக்கான உள் இதழியல் நடைமுறைகள், சிறந்த மக்கள் தொடர்பு திட்டம், பசுமை எஃகு ஊக்குவிப்புக்கான இயக்கத்தில் சமூக ஊடகங்களின் சிறந்த பயன்பாடு, போன்றவற்றுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் செயில் நிறுவனத்தின் புகழை மேலும் அதிகரிக்கும் என்று செயில் நிறுவனத்தின் தலைவர் திரு அமரேந்து பிரகாஷ் கூறினார்.  அனைத்து தகவல்தொடர்பு முயற்சிகளிலும் மிக உயர்ந்த தரங்களைக் கையாள்வதிலும்,  புதுமைகளை புகுத்துவதிலும், செயில் நிறுவனம்  தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

கால்நடைகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க முன்னோடித் திட்டம் – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செயல்படுத்துகிறது

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்படும்  விபத்துகளைத் தவிர்க்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முன்னோடித் திட்டத்தை …