Monday, December 08 2025 | 08:14:26 PM
Breaking News

புத்தொழில்களின் தேசம் இந்தியா – உலகளாவிய தொழில்முனைவின் எதிர்கால மையம்

Connect us on:

உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்திய புத்தொழில் சூழல், புதுமை, தொழில்முனைவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.

இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவோர் உணர்வு ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங்கள் கண்டுபிடிப்புகளின் மையங்களாக மாறிவிட்டன. மலிவு இணையத்தின் பரவலான கிடைக்கும் தன்மை, இளம் ஆற்றல்மிக்க பணியாளர்களுடன் இணைந்து பல்வேறு துறைகளில் புத்தொழில்களின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.

2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் இந்த முயற்சியில் மைல்கல்லாக அமைந்துள்ளது. 2024 டிசம்பர் 25 நிலவரப்படி, 157,066 புத்தொழில் நிறுவனங்கள், தொழில் – உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டுத் துறையால் (டிபிஐஐடி – DPIIT) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 759,303 பயனர்கள் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*வணிகம் செய்வதில் எளிமை:

*வரிச் சலுகைகள்

*நிதி ஆதரவு

துறை சார்ந்த கொள்கைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன

*பாரத் ஸ்டார்ட்அப் அறிவு அணுகல் பதிவகம் (பாஸ்கர்)

* அடல் புதுமைப் படைப்பு இயக்கம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் பயன்படுத்துவதற்கான தேசிய முன்முயற்சி (நிதி -NIDHI) போன்ற முன்முயற்சிகள் புதுமையாளர்களுக்கு உள்கட்டமைப்பு, நிதி ஆதரவை வழங்குகின்றன.

உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு: புத்தொழில்கள் நாடு முழுவதும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளன.

இந்தியா, உலகளாவிய புத்தொழில் வரையறைகளை அமைப்பதற்கான பாதையில் சிறப்பாக முன்னேறி வருகிறது.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.