Thursday, December 26 2024 | 11:12:39 PM
Breaking News

இபிஎஃப்ஒ, அக்டோபர் 2024-ல் 13.41 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது – 7.50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பதிவு

Connect us on:

ஊழியர்ர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃஒ (EPFO) அக்டோபர் 2024-க்கான தற்காலிக ஊதிய தரவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 13.41 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கையை அது வெளிப்படுத்தியுள்ளது. இது அதிகரித்த வேலை வாய்ப்புகள், ஊழியர் நலன்கள் குறித்த அதிகரித்த விழிப்புணர்வைக் காட்டுகிறது.

இபிஎஃப்ஒ அக்டோபர் 2024-ல் சுமார் 7.50 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. புதிய உறுப்பினர்களில் இந்த சேர்க்கை வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள், பணியாளர் நலன்கள் குறித்த அதிகரித்த விழிப்புணர்வு இபிஎஃப்ஒ-வின் வெற்றிகரமான மக்கள் தொடர்புத் திட்டங்கள் ஆகியவை காரணமாகும்.

தரவின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் ஆகும். இது 2024 அக்டோபரில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் 58.49 % ஆகும். அக்டோபர் 2024-க்கான 18-25 வயதுக்குட்பட்டவர்களுக்கான நிகர இபிஎஃப்ஒ சேர்க்கை எண்ணிக்கை 5.43 லட்சம்.

ஏறக்குறைய 12.90 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி பின்னர் மீண்டும் இபிஎஃப்ஒ-வில் இணைந்துள்ளதாகத் தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை அக்டோபர் 2023 உடன் ஒப்பிடும்போது 16.23% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் காட்டுகிறது.

பாலின வாரியான பகுப்பாய்வு, மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் சுமார் 2.09 லட்சம் பேர் புதிய பெண் உறுப்பினர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கை 2023 அக்டோபர் 2.12% ஆண்டு வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

மாநில வாரியான பகுப்பாய்வில் மகாராஷ்டிரா மாதத்தில் 22.18% நிகர உறுப்பினர்களைச் சேர்த்து முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தனித்தனியாக மொத்த நிகர உறுப்பினர்களில் 5% க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டு முன்னிலையில் உள்ளன.

About Matribhumi Samachar

Check Also

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தனது விலை கண்காணிப்பு பிரிவு மூலம் 38 உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறது .பொருட்களின் விலையை கட்டுப்படுத்த …