Saturday, December 28 2024 | 05:50:24 AM
Breaking News

உலகின் மிகப்பெரிய தேர்தலின் விரிவான தரவுத் தொகுப்புகளின் வெளியீடு

Connect us on:

ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான 42 புள்ளிவிவர அறிக்கைகளையும், 2024-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலின் 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் அடித்தளமாக விளங்கும் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.  அதிகபட்ச தகவல்களை வெளிப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, தேர்தல் தொடர்பான தரவுகளை அணுகுதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஆணையத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயன்படுமாறு இந்த விரிவான தரவுத் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன.

 நாடாளுமன்ற தொகுதி/ சட்டமன்றத் தொகுதி/ மாநில வாரியான வாக்காளர்களின் விவரங்கள், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, மாநில / நாடாளுமன்ற தொகுதி வாரியான வாக்காளர் வாக்குப்பதிவு, கட்சி வாரியான வாக்குகள், பாலின அடிப்படையிலான வாக்களிப்பு, பெண் வாக்காளர்களின் மாநில வாரியான பங்கேற்பு, பிராந்திய வேறுபாடுகள், தொகுதி தரவு சுருக்க அறிக்கை, தேசிய/மாநில கட்சிகள் / பதிவு செய்துள்ள, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகளின் செயல்திறன், வெற்றி பெற்ற வேட்பாளர்கள்  குறித்த பகுப்பாய்வு, தொகுதி வாரியான விரிவான முடிவுகள், உள்ளிட்ட பல்வேறு தரவுகள் இந்த வெளியீடுகளில் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் தற்போது ஆழமான நுண்ணறிவு, பகுப்பாய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக இந்தத்தரவு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம்

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலை நிறுவனமான தேசிய இஸ்பாட் நிகம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) மனிதவள மேம்பாட்டு மையத்தில் உள்ள நகர …