Saturday, December 28 2024 | 05:36:47 AM
Breaking News

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

Connect us on:

நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தனது விலை கண்காணிப்பு பிரிவு மூலம் 38 உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறது .பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றின்  சில்லறை விற்பனை மூலம்  நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அன்றாட விலைகளை  கண்காணித்து பொருட்களின் விலையை நிலையானதாக  இருக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 22 அத்தியாவசியப் பொருட்களின்  அன்றாட சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகளையும் 16 கூடுதல் பொருட்களின் சில்லறை விலைகளையும் மொபைல் செயலி மூலம் சேகரிக்கப்பட்டு, சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப  விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்தைநிலை இறக்குமதி-ஏற்றுமதி வரிகளை கட்டுப்படுத்துதல், பணவியல் கொள்கை போன்ற முக்கிய முடிவுகள் மேற்கொள்வதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் கீழ், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பருப்பு வகைகள் போன்ற வேளாண்-தோட்டக்கலை விளைப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, கொள்முதல் செய்வது,  போன்ற நடவடிக்கைகள் மூலம் அவற்றின் விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் உத்திசார் நடவடிக்கைகளும் இதில் அடங்குகம்.  வேளாண் விளைப் பொருட்களை கொள்முதல் செய்வதன் மூலம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும்.

விலை நிலைப்படுத்தும் நிதித் திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு மானிய விலையில் வெங்காயம் மற்றும் தக்காளி வழங்கப்படும்.

நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில வேளாண்- விளைப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த 500 கோடி ரூபாய் தொடக்க நிதியுடன் விலை நிர்ணய நிதியம் ஏற்படுத்தப்பட்டது.  வேளாண் விளைப் பொருட்களை அறுவடை செய்யும் நேரத்தில் விவசாயிகள் / விவசாய சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து, பற்றாக்குறை காலங்களில் சேமித்து வைப்பதன் மூலம் அவற்றின் விலையை குறைக்க உதவிடுகிறது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கான  பிரதமரின் அன்னதத்தா திட்டமானது வருவாய் சேமிப்புத் திட்டத்தின் பிற கூறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2014-15 முதல் 2024-25 வரை விலை நிர்ணய நிதியத்தின் கீழ் 37,489.15 கோடி  ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. மத்திய அரசின் விலைகட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிதி மேலாண்மைக் குழுவால் தீர்மானிக்கப்படுகின்றன.  இந்த நிதியம் தற்போது நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளரின் தலைமையில் இயங்கி வருகிறது. பொதுப்பணித் திட்ட நிதியில் கிடைக்கும் உபரித் தொகையை முதலீடு செய்வதற்காக மத்திய நிதி நிறுவனம், மத்திய நிதி மற்றும் தனியார் துறை அமைச்சகத்தின் நிதி ஆலோசகர் தலைமையில் துணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..

2027-ம் ஆண்டிற்குள் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நுகர்வோர் தொலைபேசி உதவி எண்ணின்(1915) ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு, வருகின்றன. தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் வரும் அழைப்புகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரிப்பு; 2024 ஆம் ஆண்டில் மாதத்திற்கு பதிவு செய்யப்பட்ட சராசரி புகார்களின் எண்ணிக்கை 1,12,468 ஆக உயர்ந்துள்ளது

மின்னணு அறிக்கை தாக்கல் செய்யும் முறை

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளின் கீழ், நுகர்வோர்,  தங்கள் வசதிக்கேற்ப இ-தகில் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் புகாரை பதிவு செய்ய “edaakhil.nic.in” என்ற  இணைய தளம்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இ-தகில் இணையதளத்தில் புகார்களுக்கான கட்டணத் தொகையை ஆன்லைன் மூலம்  செலுத்துவதற்கான வசதியையும், கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை பதிவேற்றுவதற்கான வசதியையும் வழங்குகிறது. இனி இ-தகில் மீதும் மேல்முறையீடு செய்யலாம்.

மத்தியஸ்தம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளின் கீழ், ஒவ்வொரு நுகர்வோர் ஆணையமும் (மாவட்ட, மாநில மற்றும் தேசிய) ஒரு மத்தியஸ்த பிரிவு ஒன்று செயல்படும். நுகர்வோர் தொடர்பான  வழக்குகளில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே தீர்வு காணும் அம்சங்களில்  சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதலுடன் சமரச குழுக்களுக்கு  சமரசம் செய்வதற்காக பரிந்துரைக்கப்படலாம். எனவே, இது ஒரு மாற்றுமுறை தீர்வு அமைப்பாக செயல்படுகிறது. தற்போது, நாட்டில் சுமார் 570 சமரச மையங்கள் உள்ளன.

About Matribhumi Samachar

Check Also

நகர ஆட்சி மொழி அமலாக்கக் குழுவின் 16-வது கூட்டம்

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலை நிறுவனமான தேசிய இஸ்பாட் நிகம் நிறுவனத்தின் (ஆர்ஐஎன்எல்) மனிதவள மேம்பாட்டு மையத்தில் உள்ள நகர …