Tuesday, September 29 2026 | 06:48:37 PM
Breaking News

Matribhumi Samachar

மத்திய பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். இது குறித்து சமூக  ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ்@DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் @narendramodi- சந்தித்தார்.

Read More »

சி.ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு நினைவஞ்சலி

திரு சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது  பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை, இலக்கியம், சமூகத்துக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது : சி. ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, இந்தியாவின் …

Read More »

மாபெரும் தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்பை 2024, டிசம்பர் 11 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் டிசம்பர் 11 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை விதைத்தன. இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் எடுத்து சொல்லின. 23 தொகுப்புகளில் அவரது முழுமையான …

Read More »

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

புதுதில்லியில் இன்று (டிசம்பர் 10, 2024) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின நிகழ்ச்சியில்  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 5,000 ஆண்டுகளுக்கும் மேலான நாகரிக பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, அனுதாபம், இரக்கம் மற்றும் இணக்கமான சமூகத்தில் உள்ள தனிநபர்களின் பரஸ்பர பிணைப்பு ஆகிய மதிப்புகளை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகிறது என்று கூறினார். இந்த அம்சங்களின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் …

Read More »

புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு 3டி ஸ்கேனிங், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களில் அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கு பயிற்சி திட்டம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான டிஎஸ்டி என்சிஎஸ்டிசி திட்டத்தின் கீழ் “3டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களில் அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கு பயிற்சி திட்டம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் பயிற்சி முறையை 2024  டிசம்பர் 09 முதல் 2025  மார்ச் மாதம் வரை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை 2024 டிசம்பர் 09 அன்று காரைக்கால் கல்வி அலுவலர் திருமதி.விஜயமோஹனா தொடங்கிவைத்தார். புதுச்சேரி என்ஐடி …

Read More »

ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 55 பதக்கம் வென்ற இந்திய அணியினரை டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார்

10 வது ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் 55 பதக்கங்களை வென்று கோலாலம்பூரில் இருந்து வெற்றிகரமாக திரும்பிய இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திங்களன்று வாழ்த்து தெரிவித்தார். 42 ஆடவர், 26 மகளிர் உட்பட 68 பேர் கொண்ட இந்திய அணி, இதுவரை இல்லாத வகையில், 8 தங்கம், 18 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி போட்டியில் பங்கேற்ற 21 நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இது 1984-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் …

Read More »

கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் இசை சுற்றுலா மற்றும் கலாச்சார பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது

விஜயவாடாவில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் 2024  இசை,பக்தி மற்றும் கலாச்சார கொண்டாட்டங்களுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியன ஆந்திரப்பிரதேச அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருவிழா தெலுங்கு கலாச்சாரம் மற்றும் கர்நாடக இசையின் வளமான பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது. இதில் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் …

Read More »

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீடுகள் தொடர்பான தரவுகளில் உள்ள இடைவெளியைக் களைய மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முயற்சி

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான நாட்டின் உறுதியான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தேசிய அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், ஐநா சபையின் முகமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தேசிய அளவிலான குறியீடுகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் – தேசிய குறியீடுகளுக்கான கட்டமைப்பு அடிப்படையில், ஆண்டு தோறும் புள்ளிவிவர தினத்தன்று (அதாவது ஜூன் 29-ம் தேதியன்று) …

Read More »

திட நிலையில் “முறுக்கு அடுக்குகள்”: உதிரி வெப்பத்தை மின்சாரமாக மாற்றுவதில் ஒரு திருப்புமுனை

பெரிகிரிஸ்டல்களில் முறுக்கப்பட்ட அடுக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உதிரி வெப்பத்தை எரிசக்தியாக மாற்றும் திறனைக் கொண்ட ஒரு புதிய பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது வெப்பமின் ஆற்றல் மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. ரசாயனம், வெப்பம், எஃகு ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற தொழில்துறை செயல்முறைகளின் மூலங்களிலிருந்து உதிரி வெப்பத்தைக் கைப்பற்றி மின்சாரமாக மாற்றும் ஒரு செயல்முறையாகும். பேராசிரியர் கனிஷ்கா பிஸ்வாசும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி …

Read More »

திரிபுராவின் புளித்த மூங்கில் தண்டு உடல் பருமன் எதிர்ப்பு பண்பைக் கொண்டுள்ளது

திரிபுராவின் புளிக்கவைக்கப்பட்ட மூங்கில் தண்டு சாறு ‘மெலி-அமிலே’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. உடல் எடை மேலாண்மை மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு இது ஏற்றதாக உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நொதித்தல் நுட்பங்கள் மனித நாகரிகத்தில் பழமையானவை. அவை தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளன. முக்கியமாக உணவைப் பாதுகாக்கவும், ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவும், சுவை மற்றும் வாசனையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல், கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் …

Read More »