கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் …
Read More »வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேல் செல்கிறார்
இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கட்டின் அழைப்பின் பேரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நவம்பர் 20 முதல் 22 வரை அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அவரது இந்தப் பயணம் இந்தியா – இஸ்ரேல் இடையேயான உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், முதலீடு போன்ற …
Read More »பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை
ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ஓம்கார் மண்டபத்தில் அவர் வழிபாடு செய்தார். இந்த இடம் எல்லையற்ற கருணை மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட ஸ்ரீசத்ய …
Read More »நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
6-வது தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பு – மக்கள் பங்களிப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது பேசிய அவர், மனித நாகரிகத்தின் கதை என்பது ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், பல்வேறு நீர் நிலைகளையொட்டி அமையும் குழுக்களின் கதையாகும் என்று தெரிவித்தார். நமது பாரம்பரியத்தில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் போற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். நமது தேசியப் பாடலில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முதல் வார்த்தை சுஜலாம் என்பதாகும். எண்ணற்ற நீர் …
Read More »உலகளாவிய பருவநிலை நிதியை மறுசீரமைக்க இந்தியாவின் வாய்ப்பை எடுத்துரைக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
மாபெரும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுவான தரநிலைகளுடன் உலகளாவிய பருவநிலை நிதியை மறுசீரமைக்க இந்தியாவின் வலுவான வாய்ப்பை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பருவநிலை நிதிசார்ந்த பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முன்மொழிவு, அதிகரித்து வரும் உள்நாட்டு பசுமை நிதி ஆகியவற்றுக்கு, எதிர்காலத்திற்கான உலகளாவிய கட்டமைப்புக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கும், நடைமுறை சார்ந்த தலைமைத்துவத்தை உதாரணமாக இந்தக் கட்டுரை …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணியளவில் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மரியாதை செலுத்துகிறார். காலை 10.30 மணியளவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கௌரவிக்கும் வகையில் …
Read More »புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
புதுதில்லியில் 6-வது ராம்நாத் கோயங்கா சொற்பொழிவில் தாம் நிகழ்த்திய உரையின் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். தனித்தனியான பதிவுகளில் திரு மோடி கூறியிருப்பதாவது: “திரு ராம்நாத் கோயங்காவை பொருத்தவரை தேசம் முதலில் என்பது எப்போதும் அவரது கருத்தாக இருந்தது. எது சரியோ, எது சத்தியமோ அதன் பக்கம் அவர் நின்றார். அனைத்துக்கும் மேலானதாக கடமையை அவர் முன்வைத்தார்.” “அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் போது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. …
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 18 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,25,13,094 கணக்கெடுப்பு படிவங்கள் …
Read More »ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் 2025-ம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகளைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். ராமோஜி சிறப்பு விருதுகள் ஏழு பிரிவுகளில் வழங்கப்பட்டன: கிராமப்புற மேம்பாடு – திருமதி அம்லா அசோக் ருயா; இளைஞர் அடையாளம் – திரு ஸ்ரீகாந்த் பொல்லா; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – பேராசிரியர் மாதவி லதா …
Read More »ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியக் குழுவினர், இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டு, 6 தங்கம் உள்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். ரிகர்வ் ஆடவர் பிரிவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்ற வரலாற்று சிறப்புமிக்க …
Read More »
Matribhumi Samachar Tamil